பாறைக்குள் 2.6 கிலோ தங்கம்; ஆடவருக்கு அதிர்‌ஷ்டம்

பாறைக்குள் 2.6 கிலோ தங்கம்; ஆடவருக்கு அதிர்‌ஷ்டம்

1 mins read
49abdc36-1e74-449a-8c9b-94d7dbc7f764
படம்: டேரன் கம்ப் -
Google News Preferred Icon

ஆஸ்திரேலியாவில் ஆடவர் ஒருவருக்குப் பாறைக்குள் 2.6 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.

அந்த தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 213,000 வெள்ளி என்று தெரிவிக்கப்பட்டது.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள கோல்டன் டிரையாங்கில் என்னும் பகுதியில் தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடவருக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது.

பாறையின் எடை ஏறக்குறைய 4.6 கிலோ என்றும் அதற்குள் தங்கம் மறைந்திருந்ததாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறின.

தமது பெயரை வெளியிட அந்த ஆடவர் மறுத்துவிட்டதாகவும் அவை குறிப்பிட்டன.

தங்க முக்கோணப் பகுதியில் தங்கம் ஆங்காங்கே பூமிக்கு அடியில் புதைந்திருக்கும். அதைத் தேடுவதையே தொழிலாகப் பலர் வைத்துள்ளனர். 1800களில் இருந்தே அங்கு தங்கம் கிடைத்து வருகிறது.

1869ஆம் ஆண்டு விக்டோரியாவின் மோலியாகுல் பகுதியில் 72 கிலோ தங்கம் கிடைத்தது. அதன் தற்போதைய மதிப்பு கிட்டத்தட்ட 6.8 மில்லியன் வெள்ளி.

குறிப்புச் சொற்கள்