ரபிஸியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்: அன்வார்

ரபிஸியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்: அன்வார்

1 mins read
d49643ad-6050-4ce4-8dbb-15173341ece8
திரு ரஃபிஸி ரம்லி (வலது) முன்பு பிகேஆர் கட்சியில் இருந்தபோது, திரு அன்வார் இப்ராகிமுடன் தோன்றிய படம். - படம்: ஃப்ரி மலேசியா டுடே

கோலாலம்பூர்: முன்னாள் பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவசரப்பட்டு தீர்ப்பளிக்க  வேண்டாம் என்று  பிரதமர் அன்வார் இப்ராகிம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊழல் விவகாரத்தில் அரசாங்கம் சமரசம் செய்யாது என்றாலும், ரஃபிஸி மீதான  குற்றச்சாட்டுகளை அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பயன்படுத்தக்கூடாது  என்று அன்வார் வலியுறுத்தினார்.

யாராவது நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்பு நாம் தீர்ப்பை  வழங்கக்கூடாது. இப்போதைக்கு, விசாரணைகள் தொடர இடமளிக்க வேண்டும் என்று  அவர் வெள்ளிக்கிழமை பந்திங்கில் தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம்  கூறினார்.

இந்தப் புனித ரமலான் மாதத்தில் எந்த விரல் நீட்டலும் இருக்கக்கூடாது. நாம்  சரியானதைச் செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை முறையாக  விசாரிக்க வேண்டும். தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், நீதிமன்றத்தில்  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இது நம் நாட்டில் ஒரு பிரச்சினை. யாராவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தவுடன்,  உண்மைகள் இன்னும் அறியப்படாவிட்டாலும், மக்கள் உடனடியாகக் கண்டனத்துடன்  குதிக்கின்றனர். அது அவதூறாக மாறக்கூடும் என்று திரு அன்வார் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்