ஹோர்முஸ் நீரிணையில் மாற்றுவழி: ஈரான் அறிவுறை

ஹோர்முஸ் நீரிணையில் மாற்றுவழி: ஈரான் அறிவுறை

1 mins read
203512d1-6082-4754-813d-2b979c54a982
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இருப்பதாக ஈரான் எச்சரித்தது. - படம்: ஏஎஃப்பி

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்கு மாற்றுவழிகள ஈரான் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்துள்ளது.

கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இருப்பது குறித்து ஈரான் எச்சரித்தது.

இரண்டு வார போர் நிறுத்த உடன்பாட்டின் ஓர் அம்சமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையைத் தற்காலிகமாகத் திறந்துவிட ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், நீரிணை வழியாகச் செல்ல திட்டமிட்டுள்ள அனைத்து கப்பல்களும் கடல்துறைப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும்படி கூறிய ஈரான் ராணுவம், கண்ணிவெடி அபாயத்தைத் தவிர்க்க மாற்றுவழிகளைப் பயன்படுத்தும்படி அறிக்கை வெளியிட்டது.

எந்த மாற்றுவழியைப் பயன்படுத்தி ஹோர்முஸ் நீரிணையிலிருந்து வெளியேறவேண்டும் என்பதையும் அறிக்கைக் குறிப்பிட்டது.

அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வாரங்களுக்குப் போரை நிறுத்துவைக்க ஒப்புக்கொண்டன.

ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிடவில்லை என்றால் ஈரான் முழுமையாகத் துடைத்தொழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.

அந்தக் காலக்கெடு முடிவதற்கு ஒரு மணிநேரம்முன் சண்டைநிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

மார்ச் மாதத்திலிருந்து ஹோர்முஸ் நீரிணைவழி சரக்குக் கப்பல்கள் செல்வதை ஈரான் தடுத்துநிறுத்தியதால் அனைத்துலக எரிசக்தி விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன.

குறிப்புச் சொற்கள்