சீனப் புத்தாண்டு காலத்தில் கோலாலம்பூரில் விதிமீறிய 456 வாகன ஓட்டுநர்கள்

சீனப் புத்தாண்டு காலத்தில் கோலாலம்பூரில் விதிமீறிய 456 வாகன ஓட்டுநர்கள்

1 mins read
7e7365ac-3bd2-473d-838a-a158d13eea97
சோதனையின்போது 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: மலாய் மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டுக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக 456 பேருக்கு அபராதக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் வட்டார சாலைப் போக்குவரத்துத் துறை இத்தகவலை சனிக்கிழமை (பிப்ரவரி 21) தெரிவித்தது.

செந்துல் பசார் சுங்க வளாகத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சிறப்பு மோட்டார் சைக்கிள் நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனைகளில் 456 வாகனங்கள் பிடிபட்டன.

சோதனை நடவடிக்கையின்போது 912 மோட்டார் சைக்கிள்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டன. அப்போது விதிமீறிய 152 வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விதிமீறியதற்காக 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹமிதி ஆடம் கூறினார்.

காலாவதியான ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தியது, உரிமமின்றி வாகனம் ஓட்டியது, காப்புறுதி இல்லாதது போன்ற குற்றங்கள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகோலாலம்பூர்சோதனை