வரலாற்றிலேயே 2023 ஆக வெப்பமான ஆண்டு

வரலாற்றிலேயே 2023 ஆக வெப்பமான ஆண்டு

1 mins read
d7586909-25f2-4b76-8b9c-c09fc2212f68
2016ஆம் ஆண்டிலிருந்து, 2023ஆம் ஆண்டு ஆக வெப்பமான ஆண்டாக இருக்கும் எனப் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பாரிஸ்: வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து வரலாற்றிலேயே ஆக வெப்பமான ஆண்டாக இவ்வாண்டு இருக்கும் என ஐரோப்பாவின் பருவநிலைக் கண்காணிப்பாளர் புதன்கிழமை கூறினார்.

பருவநிலை சாதனைகளை முறியடித்த ஆறாவது மாதமான நவம்பர் ஒரு தனிச்சிறப்புடைய மாதமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவலைத் தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

துபாயில் நடைபெறும் ‘காப் 28’ உச்சநிலை மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்துப் பேச்சுவார்த்தை நடக்கும் வேளையில் இந்தத் தகவல் அழுத்தம் தருவதாக உள்ளது.

இவ்வாண்டு நவம்பர் மாதம், இதற்கு முந்தைய நவம்பர் மாதங்களோடு ஒப்பிடும்போது ஆக வெப்பமான மாதமாக இருந்தது.

இவ்வாண்டு உலகளாவிய சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.46 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் பருவநிலை மாற்றத்திற்கான சேவை நிலையம் கூறியது.

2023ஆம் ஆண்டு ஆக வெப்பமான ஆண்டாக இருக்கும் என 2016லிருந்து எச்சரிக்கப்பட்டு வந்தது. குறிப்பாகச் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆக வெப்பமான மாதங்களாக இருக்கும் எனவும் இதற்கு முன்னர் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இந்த எச்சரிக்கை முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
வெப்பநிலைஅதிகரிப்பு