மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு 100,000 லிட்டர் டீசல் கடத்தல்

மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு 100,000 லிட்டர் டீசல் கடத்தல்

1 mins read
69d40d68-4470-4858-b717-fa91c7e4caab
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ள வேளையில் டீசல் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

சோங்க்லா: மலேசியாவைச் சேர்ந்த தளவாட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 100,000 லிட்டர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைத் தாய்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மலேசிய எல்லையோரமுள்ள சோங்க்லா மாகாணத்தின் சாடாவோ மாவட்டத்தில் அதனைப் பதுக்கி வைத்திருந்த அந்நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

காவல்துறை, ராணுவம், உள்ளூர் அதிகாரிகள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த டீசல் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. தரைக்கு அடியில் அந்த நிறுவனம் ஏற்படுத்தி இருந்த கிடங்கில் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மலேசியக் குடிமகனுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் மீதான விசாரணை நடைபெறுகிறதென்றும் 100,000 லிட்டர் டீசலை வைத்திருப்பதற்கான எந்த ஓர் உரிமத்தையும் நிறுவனம் பெற்றிருக்கவில்லை என்றும் தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.

அந்த டீசல் மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குக் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் மீது அழுத்தம் ஏற்பட்டு வரும் வேளையில் இந்த டீசல் கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
டீசல்எரிபொருள்கடத்தல்