பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

பிரதமர் லீ சியன் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

1 mins read
26b268bd-5cfb-4123-acea-f824d8991354
பாலித் தீவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -
Google News Preferred Icon

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாலித் தீவில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டுக்கு இடையே சந்தித்துள்ளனர்.

பசுமைப் பொருளியல், சூரிய சக்தி உள்ளிட்ட புதிய துறைகளில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக

இந்தியப் பிரதமரின் அலுவலகம் தெரிவித்தது. நிதித் தொழில்நுட்பம், வர்த்தக உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு பற்றியும் அவர்கள் பேசியதாகக் கூறப்பட்டது.

இந்தியாவின் 'கிழக்குநோக்கிச் செயல்படுக' கொள்கையில் சிங்கப்பூர் முக்கிய அங்கம் வகிப்பதாக இந்தியாவின் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

திரு லீயும் திரு மோடியும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான உத்திபூர்வ பங்காளித்துவத்தையும் இருநாட்டு உயர் தலைவர்களும் அமைப்புகளும் அடிக்கடி தொடர்புகள் வைத்திருப்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டனர் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் முதலீடுத் தொடர்புகளை அதிகப்படுத்தற்கான கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.