ஜப்பானின் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபே துப்பாக்கித் தாக்குதலுக்கு பலி

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபே துப்பாக்கித் தாக்குதலுக்கு பலி

1 mins read
31af401b-e939-4f65-8119-7b8a3e9f99db
துப்பாக்கிச் சூடு நடந்தபிறகு சிகிச்சை பெறும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே. படம்: கியோடோ (ராய்ட்டர்ஸ்) -
multi-img1 of 3
Google News Preferred Icon

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபே,67, மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் மரணம் அடைந்துள்ளார்.

ஜப்பானின் நாரா நகரில் அரசியல் கூட்டம் ஒன்றில் திரு அபே பேசிக்கொண்டிருந்தபோது ஒருவன் அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திரு அபேயின் மார்பில் குண்டுகள் பாய்ந்துள்ளது என நம்பப்படுகிறது. அவர் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவனுக்கு 40 வயது என்றும் தமக்கு திரு அபேயையும் அவரது கொள்கைகளையும் பிடிக்காததால் அவரைக் கொல்லத் திட்டமிட்டதாக அறியப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் கைதுப்பாக்கிகள் வைத்துக்கொள்வதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. இருப்பினும் இப்படி இரு சம்பவம் நிகழ்ந்திருப்பது ஜப்பானிய மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.