உத்தரகாண்ட்: இமய மலையின் பனிப்பாறை உடைந்ததை அடுத்து கிட்டத்தட்ட 150 பேர் இறந்துவிட்டதாக அஞ்சப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடக்கத்தில் அந்தப் பனிப்பாறை அணை ஒன்றின்மீது விழுந்ததில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிராமப்பகுதியில் வாழும் சிலர் தங்களது வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆலக்நந்தா ஆறு ஓடும் பள்ளத்தாக்கிலுள்ள கிராமப்பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நூறு முதல் 150 வரையிலான பேர் மாண்டுவிட்டதாக அஞ்சப்படுகிறது. சமோலி மாவட்டத்தில் இது நேர்ந்ததை அடுத்து மக்கள் வெளியேறும்படி அங்குள்ள போலிசார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். உயர் விழிப்புநிலையில் இருக்கும்படியும் இந்தியா, வட மாநிலங்களைக் கேட்டு வருகிறது.

