கண்விழித்தார் பாடகர் எஸ்.பி.பாலா

கண்விழித்தார் பாடகர் எஸ்.பி.பாலா

1 mins read
7afdde95-6fff-4b40-bbcb-6a847916ffbe
-
Google News Preferred Icon

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி. பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகத்தினரும் ரசிகர்களும் அவருக்காக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மயக்க நிலையில் இருந்த எஸ்.பி. பாலா அவ்வப்போது கண் விழிப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.