தேர்தல் தேதி குறித்து பிரதமர் லீ சியன் லூங் கருத்து: இரண்டு தெரிவுகள்

தேர்தல் தேதி குறித்து பிரதமர் லீ சியன் லூங் கருத்து: இரண்டு தெரிவுகள்

1 mins read
9248690a-988e-47fb-84bc-2882dcb05b95
இப்போதைய சூழலையும் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் பொறுத்தே தேர்தல் நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படலாம் என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தேர்தல் தேதி தொடர்பில் இரண்டு தெரிவுகள் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

இந்நிலையில், இப்போதைய சூழலையும் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் பொறுத்தே தேர்தல் நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படலாம் என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் நேற்று (மார்ச் 13) வெளியிட்டது.

தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டுவிட்டதால் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடி வரும் இந்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடாது என எதிர்க்கட்சிகளில் சில வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இப்போதைய சூழலைப் பார்க்கும்போது, நிலைமை சீரடைந்த பிறகு தேர்தலை நடத்துவது அல்லது முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிப்பது என இரு தெரிவுகள் இருப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு நாளைய (மார்ச் 15) தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #பொதுத்தேர்தல் 2020

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர் லீ