மத்திய விரைவுச்சாலையில் விபத்து: மூவருக்கு காயம்

மத்திய விரைவுச்சாலையில் விபத்து: மூவருக்கு காயம்

1 mins read
0b51f892-a667-48c8-bac3-6385dd1920dc
-
Google News Preferred Icon

மத்திய விரைவுச்சாலையின் சுரங்கப் பாதைக்கு சற்று வெளியே நேற்று உச்ச போக்குவரத்து நேரத் தில் நிகழ்ந்த விபத்தில் மூவர் காயமடைந்தனர். இந்த விபத்தால் அங்கு தொடங்கி, அங் மோ கியோ அவென்யூ 5 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து நிலைகுத்தியதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தது. இதன் காரணமாக, வாகன மோட்டிகள் விரைவுச்சாலையின் ஒன்றாம், இரண்டாம் தடங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட் டனர். இதுபற்றிக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் போலிசாரும் இந்த விபத்து குறித்து நேற்றுக் காலை சுமார் 8.05 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் கூறினர்.

இதைத் தொடர்ந்து குடிமைத் தற்காப்புப் படை மூன்று ஆம்பு லன்ஸ் வாகனங்களை அந்த இடத்திற்கு அனுப்பியதாக கூறி யது. 30 வயதுகளில் இருவர், 46 வயதில் ஒருவர் என்று இந்த விபத்தில் காயமடைந்த மூவர் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டதாக அறியப்படுகிறது. இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தவர் கள் என்று கூறப்படுகிறது. போலிசார் இந்த விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.