2,000 சிறாருக்கு மேலும் ஆதரவுத் திட்டங்கள்

2,000 சிறாருக்கு மேலும் ஆதரவுத் திட்டங்கள்

1 mins read
cb004af2-8596-4581-8b49-d6142a632f9a
-
Google News Preferred Icon

என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் பாலர்பள்ளியைச் சேர்ந்த சுமார் 2,000 பிள்ளைகளுக்கு இந்த ஆண்டு பல செயல்திட்டங்கள் மூலம் கூடுதலான ஆதரவு கிடைக்கவிருக்கிறது. அந்தச் செயல்திட்டங்கள், பிள்ளைகளின் கல்வி அறிவையும் அவர்களுக்கான நிதி உதவியை யும் மேம்படுத்தும். வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும். அத்திட்டங்களில் $5 மில்லிய னுக்கும் அதிக தொகை முதலீடு செய்யப்படும். என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் நிறுவனத்தின் 124 நிலையங் களில் 14,000 சிறார்கள் இருக் கிறார்கள்.

குறைந்த வருமான குடும்பங் களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இச்செயல்திட்டங்கள் சமூக முன்னேற்றத்தைச் சாதிப்ப தில் முக்கிய பங்காற்றும் என்று என்டியுசி தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

சின் சுவீயில் இருக்கும் மை ஃபர்ஸ்ட் பள்ளிக்கூடத்தில் நடந்த குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தின்போது பிள்ளைகளுக்கு என்டியுசி தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் அன்பளிப்புப் பையை வழங்குகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்