‘ஏஐ’ அமைச்சு உருவாக்குவேன்: விஜய் வாக்குறுதி

‘ஏஐ’ அமைச்சு உருவாக்குவேன்: விஜய் வாக்குறுதி

1 mins read
தமிழகத்தில் ஏஐ தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
22a9e54d-6bf5-4a0b-9872-3db055a2444a
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) கன்னியாகுமரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய திரு விஜய். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

கன்னியாகுமரி: தவெக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தலைநகராகத் தமிழ்நாடு மாறும் என்று அக்கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஏஐ தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஏஐ நகரம், ஏஐ அமைச்சு போன்றவை உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) கன்னியாகுமரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது திரு விஜய் அந்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

“காரைக்குடியில் பேச முடியாமல் போனது. தனது ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலத்திட்டம் போய்ச் சேரும். அதற்காக ஆதார் அட்டை போலத் தமிழகத்தில் ஓர் அடையாள அட்டை உருவாக்கப்படும். ‘ஏஐ’ தரவுடன், லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள் அந்த அட்டைமூலம் வழங்கப்படும்,” என்று விஜய் கூறினார்.

அரசு அலுவலகங்களில் வேலை நடக்காமல் இருக்க லஞ்சம் ஒரு காரணமாக உள்ளது. வரவுசெலவுத் திட்ட நிதி எங்கே செல்கிறது என நமக்குத் தெரியாது. தவெக ஆட்சியில், இணையத்தளம் மூலமாக அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஆலோசனை வழங்கலாம், நிதிநிலையைக் கண்காணிக்கலாம்,” என்றும் திரு விஜய் தனது பிரசாரத்தில் தெரிவித்தார்

குறிப்புச் சொற்கள்