கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி

கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி

1 mins read
8a666e58-5f57-48be-9197-84f75d80c1f3
நலிந்த கலைஞர்கள், கலைத்துறை சார்ந்த எழுத்தாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கியது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்குப் பொற்கிழியாக தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும், தமிழ் மொழியில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

மேலும், தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

அத்துடன், மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (26.2.2025) வழங்கியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்