கூட்டணி ஆட்சியை வரவேற்போம்: பிரேமலதா விருப்பம்

கூட்டணி ஆட்சியை வரவேற்போம்: பிரேமலதா விருப்பம்

1 mins read
339d6454-faf0-472a-8b53-727aa49c189e
மா விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். - படம்: ஊடகம்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை வரவேற்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் தேமுதிக சார்பில் மாம்பழ விவசாயிகளுக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, மா விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதி​முக​வுக்கு தனிப்​பெரும்பான்மை கிடைக்​கும் என அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறு​வதும், மத்​திய அமைச்​சர் அமித்ஷா தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமை​யும் என்று கூறு​வதும் அவர​வர் கருத்​து.

“தேமு​தி​கவைப் பொறுத்​தவரை கூட்​டணி ஆட்​சியை வரவேற்​கிறோம். தேர்​தல் கூட்​டணி குறித்து ஜனவரி 9ஆம் தேதி அறி​விப்​போம்,” என்றார் பிரேமலதா.

பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளை இணைத்து கூட்​டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதைக் காலம்தான் முடிவு செய்​யும்,” என்றார்.

தற்போது பாஜக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் தேமுதிக, அதே அணியில் நீடிக்குமா அல்லது திமுக கூட்டணியுடன் இணையுமா என்பது இதுவரை உறுதியாகவில்லை.

இருதரப்புடனும் அக்கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்