நண்பருக்கு வாய்ப்பளித்த விஜய்

நண்பருக்கு வாய்ப்பளித்த விஜய்

1 mins read
6be7f9ef-f89f-41fe-a762-d40ff5242ac1
ஸ்ரீநாத். - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

சென்னை: தனது நீண்டகால நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்துக்கு தவெக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளார் விஜய். அவருக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜய்யும் ஸ்ரீநாத்தும் ‘வேட்டைக்காரன்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் மேலும் சில படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.

இருவரும் கல்லூரி நாள்கள் முதல் இப்போதுவரை நெருக்கமாக நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீநாத் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பாக களமிறக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்