மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்குகளைச் செலுத்தினர்

மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்குகளைச் செலுத்தினர்

2 mins read
225f16bd-ba40-4512-a425-adbb020086a1
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் அஞ்சல்வழி வாக்குகளைப் பல்லாவரம் அரசு உதவி பெறும் பள்ளியில் செலுத்தினர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்​தல் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினருக்குப் பயிற்சி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

வாக்​குப்​ப​திவு அலு​வலர்​களின் கடமை​கள், பணி​கள், பொறுப்​பு​கள் தொடர்​பான தலைப்புகளி​லும் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களைக் கையாள்​வது குறித்த நேரடிப் பயிற்​சி​ அளிக்​கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்​குப்​ப​திவு அலு​வலர்​கள் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்பதால் அவர்கள் தங்​களுடைய வாக்​கு​களைச் செலுத்த அஞ்சல் வாக்​குச்​சீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

இம்முறை ஏறக்குறைய மூன்று லட்​சம் வாக்​குப்​ப​திவு அலு​வலர்​கள் அஞ்சல்வழி வாக்களிக்க விண்​ணப்​பித்​திருந்தனர். இவர்கள் அனைவரும், ​ப​யிற்சி மையங்​களி​லேயே தங்களுடைய வாக்​கு​களைப் பதிவு செய்தனர்.

கடந்தகாலத் தேர்தலில் தேர்​தல் பணி​யாளர்​கள் அஞ்சல் வாக்​குச்​சீட்டைத் தங்​கள் வீட்​டுக்கு எடுத்​துச்சென்​று, பின்​னர் அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பர்.

இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தடையற்ற மின்சாரம்

சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் ​வாக்குப்பதிவன்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளன்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக மின்வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு நேரத்தில் அரசியல் கட்சியினர் செயற்கையாக மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாகக் கடந்த காலங்களில் பரவலாகப் புகார்கள் எழுந்தன. அதேபோல், இப்போதும் நடந்துவிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக உள்ளது.

தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ள தேர்தல் ஆணையம், சீரான மின் விநியோகம் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என நம்புகிறது.

இதையடுத்து, இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு, வாக்குகள் எண்ணும் நாளன்று தடையற்ற மின்சாரம் வழங்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, கோடைக்காலத்தில் மின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க, இரவு நேரங்​களில் மின்​தடை ஏற்​படு​வதைத் தடுக்க, அலு​வலர்​கள் நள்​ளிரவு வரை பணி​யாற்ற அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்