ஜனவரியில் 100 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்கும் தமிழக வெற்றிக் கழகம்

ஜனவரியில் 100 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்கும் தமிழக வெற்றிக் கழகம்

1 mins read
bc2ac644-823c-459e-aa2f-e3d5a5e92040
விஜய். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தலைவர் விஜய்யின் உத்தரவுக்கு ஏற்ப, ஒவ்வொரு மாவட்டங்களின் நடப்பு நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்தடுத்து கூட்டி பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகளையும் பல்வேறு அணித்தலைவர்களையும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் விஜய்யின் ஒப்புதலோடு அவர்களது பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தில் மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பு வகித்து சிறப்பாகச் செயல்பட்ட பலருக்கு தவெக மாவட்டச் செயலாளர் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் விஜய் வெளியிடக்கூடும். மொத்தம் 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு ஏற்ப மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

எந்தெந்த தொகுதி, எந்த மாவட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்