தமிழகத்தில் முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 34% உயர்வு

இந்தத் தேர்தலில் முதன்முதலாக 14.59 லட்சம் இளைஞர்கள் வாக்களிக்கின்றனர்

தமிழகத்தில் முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 34% உயர்வு

2 mins read
0f27965e-4d07-4842-81b1-563d584ac628
தமிழ்நாட்டில் முதன்முறை வாக்களிப்போர் எண்ணிக்கை கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைவிட 34 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படம்: ஓன் தமிழ்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, முதன்முறை வாக்களிப்போர் எண்ணிக்கை கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைவிட 34 விழுக்காடு அதிகரித்துள்ளது.

18 வயது முதல் 19 வயது வரையுள்ள 145,939 இளம் வாக்காளர்கள் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள் 762,308 பேர், பெண்கள் 696,632 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 99 பேர். இதில் பெண்களைவிட ஆண்கள் 65,676 பேர் அதிகம்.

இந்த எண்ணிக்கை தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வாக்காளர்களில் 34 விழுக்காட்டு உயர்வு என்பது அரசியல் கட்சிகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரிய வாக்கு வங்கி அரசியலைத் தாண்டி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாகப் புதிய வாக்குறுதிகளைக் கட்சிகள் முன்வைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு முகாம்களும் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புப் பதிவுப் பணிகளும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

-

மாவட்ட வாரியான தரவுகள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட அதிகம்.

நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிந்துள்ளனர்.

இளம் வாக்காளர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு, கல்வித் தரம், மின்னிலக்க உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு தங்களின் வாக்குகளைச் செலுத்துவார்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சட்டமன்றத் தோ்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் படிவம் வழங்கும் பணி சோளிங்கரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9 ) தொடங்கியது.
சட்டமன்றத் தோ்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் படிவம் வழங்கும் பணி சோளிங்கரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9 ) தொடங்கியது. - படம்: தினமணி

அதிகமான பெண் வாக்காளர்கள்

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 57,343,291 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் 28,030,658 பேர். பெண்கள் 2,934,905 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். ஆண்களைவிடப் பெண்கள் 1,274,247 பேர் அதிகம்.

80 வயதுக்கு மேற்பட்ட 1,062,752 முதியவர்கள், மூதாட்டிகள் வாக்களிக்கிறார்கள். இவர்களில் 487,536 பேர் ஆண்கள், 575,195 பேர் பெண்கள், 21 பேர் மூன்றாம் பாலினத்தவர். இந்த வயதுப் பிரிவிலும் ஆண்களைவிடப் பெண்கள் 87,659 பேர் அதிகம்.

குறிப்புச் சொற்கள்