சாம்பல் விற்பனை வருவாய் ரூ.218 கோடியாக அதிகரிப்பு

சாம்பல் விற்பனை வருவாய் ரூ.218 கோடியாக அதிகரிப்பு

1 mins read
1343ef7e-7d31-435a-826b-13e2c419f157
தமிழ் நாடு அனல் மின்நிலையங்களில் உற்பத்தியாகும் சாம்பல் விற்பனையில் முதன்முறையாக பெரும் வருவாய் கிடைத்துள்ளது. - கோப்புப் படம்: இணையம்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தின் சாம்பல் விற்பனை வருவாய் முதல் முறையாக, 2022 - 23ல், ரூ218 கோடி ஆக அதிகரித்துள்ளது.

சேலம், துாத்துக்குடி, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள தமிழக மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக தினமும் சராசரி, 60,000 டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து, பல நுாறு டன், உலர் சாம்பல் வெளியேறுகிறது.

அதில் 20 விழுக்காடு செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட சிறு தொழில்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. மீதி, அதிக விலை கோரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில், குறைந்த விலைக்கு எடை குறைவாக வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தன. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதைத் தடுக்க கடந்த இரு ஆண்டுகளாக சிமென்ட், கல்நார் ஷீட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நீண்டகால ஒப்பந்தங்கள் வாயிலாக சாம்பல் விற்கப்படுகிறது. சாம்பல் பிரிவில் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நடவடிக்கைகளால் வருவாய் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்