பாஜக, அதிமுக இணைந்திருந்தால் 17 இடங்களில் வெற்றி

பாஜக, அதிமுக இணைந்திருந்தால் 17 இடங்களில் வெற்றி

1 mins read
10566d72-0407-4f7e-b488-478f0568baaa
அதிமுக, பாஜக கட்சி சின்னங்கள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், 28 தொகுதிகளில் அதிமுகவுக்கும் 11 இடங்களில் பாஜகவுக்கும் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால் 17 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இம்முறை அதிமுக, பாஜக இடையே நிச்சயமாக கூட்டணி அமையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

இம்முறை 22 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 6 இடங்களிலும் அதிமுக 11 தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்தன.

தேர்தல் முடிவுகளைப் பார்த்த பின்னர், கூட்டணி அமைக்காமல் பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொண்ட இருகட்சி பிரமுகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்