பிரக்ஞானந்தாவின் திறமையைக் கண்டு சதுரங்க உலகம் வியப்பு: முதல்வர் பாராட்டு

1 mins read
8751b723-865a-4702-baaf-c526854292b9
பிரக்ஞானந்தா. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவின் திறமையைக் கண்டு சதுரங்க உலகம் வியந்து போயுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நார்வே அனைத்துலக சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, உலக சதுரங்க சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன், பாபியோனா ஆகிய இருவரையும் வீழ்த்துயுள்ளார்.

இருவரும் அனைத்துலக சதுரங்க தரவரிசையில் ஒன்று, இரண்டாம் இடங்களில் இருப்பவர்கள்.

இந்த அபார வெற்றிகளின் மூலம் உலகத்தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.

அவரது சாதனையைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தர வரிசையில் முதல், இரண்டாம் நிலைகளில் உள்ள வீரர்களை வீழ்த்துவது சிறப்பான சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்