ராமேசுவரம்: பாம்பன் தூக்குப்பாலம் பகுதியைக் கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கெனவே இருந்த பழைய ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததால் புது ரயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.535 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆகப்பெரிய கப்பல்களும் கடந்து செல்லும் வகையில் புதிய பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் காரணமாக, தூக்குப்பாலம் கால்வாயைக் கடந்து செல்ல பெரிய படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

