சென்னை: நூறு நாள் வேலை திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.1,229 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இத்திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் உள்ள நிலுவைத்தொகை உள்பட ரூ.921 கோடி நிதியை தமிழகத்துக்கு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.20 கோடி மனிதநாள்களை அனுமதிக்கும் தொழிலாளர் பட்ஜெட்டுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

