24 தமிழக மீனவர்களை விடுவித்த இலங்கை

1 mins read
46fb771f-9dd2-4bbd-8378-ce44e37045af
ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 24 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கடந்த மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 24 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அதன் பலனாகக் கடந்த 4ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை விடுதலை செய்தது.

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 24 மீனவர்களும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

இதையடுத்து அனைவரும் வெவ்வேறு வாகனங்கள் மூலம் சனிக்கிழமை தங்கள் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்