அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: இபிஎஸ்

அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: இபிஎஸ்

1 mins read
2b1315a1-d676-4de9-93d5-d2bb820e12c0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்லும்வரை அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கழக உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடு தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப்பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்திலும், தேமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்திலும், வாக்களிக்குமாறு பொதுமக்களை பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார்.

குறிப்புச் சொற்கள்