திரையரங்க ஊழியர்களுக்கும் விடுமுறை

திரையரங்க ஊழியர்களுக்கும் விடுமுறை

1 mins read
b154ff5c-7b8f-433e-a031-4fd07558d8b3
ஏப்ரல் 19, தமிழ்நாட்டில் பொது விடுமுறை - படம்: இணையம்
Google News Preferred Icon

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று, கடைகள் மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதமிழ்நாடுநாடாளுமன்றத் தேர்தல்விடுமுறை