கோவையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் திடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் திடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 mins read
35fc1db6-16ac-4fae-8b92-6e2ffb207195
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்:
Google News Preferred Icon

சென்னை: கோவையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் திடல் அங்குள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு ஆர்வலர் என்ற வகையில், 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தை அடுத்து, தமிழகத்தின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் திடலாக இது விளங்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்