மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட ப.சிதம்பரம் வலியுறுத்து

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட ப.சிதம்பரம் வலியுறுத்து

1 mins read
4f314fa6-8d86-4227-b62b-249c9acc841a
பா.சிதம்பரம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சிவகங்கை: தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும் ஜெய்சங்கரும் ஏன் தமிழகத்தில் போட்டியிடவில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு அமைச்சர்களும் தேர்தலில் போட்டியிட பயந்து, பிரதமர் மோடியின் பின்னால் ஒளிந்துகொள்ளக் கூடாது என அவர் சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், கச்சத்தீவை யாரும் யாருக்கும் தாரை வார்க்கவில்லை என்றார்.

“கச்சத்தீவை யாரும் நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளவில்லை. அது தொடர்பான உடன்பாடு முடிந்துவிட்டது.

“எனவே யாரும் இந்தப் பிரச்சினையை மீண்டும் எழுப்பக்கூடாது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது,” என்றார் ப.சிதம்பரம்.

தற்போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும் ஜெய்சங்கரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக திடீரெனக் கேள்வி எழுப்புவது இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய தீங்கு என்று குறிப்பிட்ட ப.சிதம்பரம், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் முரண்பாடுகளையும் மோதலையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனம் தேவை என்றார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்