இந்திரா காந்தி கல்லூரியில் மரத்தடி காந்திச் சிலை திறப்பு

இந்திரா காந்தி கல்லூரியில் மரத்தடி காந்திச் சிலை திறப்பு

1 mins read
a5d5a9fc-98aa-4b92-97f7-427ea2179492
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருச்சி: கடந்த 1934ஆம் ஆண்டில் திருச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் மகாத்மா காந்தி.

திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் அந்த மரம் அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி வந்து சென்றதன் நினைவாக அம்மரத்தடியில் தற்போது காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அச்சிலையின் திறப்பு விழா இந்திரா காந்தி கல்லூரியில் நடைபெற்றது. அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.

இந்தச் சிலையை எம்.எஸ். நாகப்பா ஸ்கல்ப்டர்ஸ் 1911 என்ற நிறுவனத்தின் சிற்பி கிஷோர் நாகப்பா வடிவமைத்துள்ளார்.

சிலைத் திறப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக அளவில் பொருளாதார ரீதியில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளதாகக் குறிப்பிட்டார். அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்