மதுரை விமான நிலையத்தில் துபாய் பயணியிடம் இருந்து கடத்தல் தங்கம் பறிமுதல்

1 mins read
d1b36856-c677-404f-abfa-08c176610c2d
மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த 322 கிராம் தங்கம். - படம்: ஊடகம்

மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்திறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பசை மற்றும் பவுடராக கடத்தி வரப்பட்ட அந்தத் தங்கத்தை மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கிட்டத்தட்ட 1 கிலோ தங்கம் பசை வடிவில் ஜீன்ஸ் கால் சட்டையில் மறைத்துக் கொண்டு வரப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. அதையடுத்து இந்தியாவின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்