திருநள்ளாறு: பெருமாள் கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

திருநள்ளாறு: பெருமாள் கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

1 mins read
69b607a5-aae6-46a7-9fdc-da3d712320d0
முறிந்து விழுந்த கொடிமரம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

காரைக்கால்: திருநள்ளாறில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ நளபுர நாயகி சமேத நள நாராயண பெருமாள் கோவிலில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (3.3.2024) காலை 9 முதல் 10.30-க்குள் தொடங்குவதற்கான வழிபாடு நடைபெற்றது.

கொடி மரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது.

இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உரிய பராமரிப்பு இல்லை என பக்தர்கள் பலரும் கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்