தாயின் கல்லறையே மண மேடையானது

தாயின் கல்லறையே மண மேடையானது

1 mins read
1072114b-0dfb-426e-af33-5bbbddd3aacd
தாயாரின் கல்லறையில் திருமணம் செய்துகொண்ட தினேஷ் குமார், காயத்திரி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சிவகங்கை: தனது தாயார் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாக அவரது கல்லறையையே தனது மணமேடையாக மாற்றிக் கொண்டார் மதுரை இளையர் தினேஷ் குமார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாயார் ஈஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார்.

தாயாரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் அவருக்காக மணிமண்டபம் கட்டி தெய்வமாக வழிபட்டு வருகிறார் தினேஷ் குமார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மகனின் திருமணத்தை ஊரே வியக்கும்படி நடத்த வேண்டும் என்று தனது தாயார் ஈஸ்வரி ஆசைப்பட்டதை நினைத்துப் பார்த்த தினேஷ் குமார், தனது வருங்கால மனைவியுடன் கலந்தாலோசித்தார்.

இதையடுத்து மணமகளின் சம்மதத்துடனும் இரு குடும்பத்தாரின் ஒப்புதலுடனும் தினேஷ் குமார், காயத்திரி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

குறிப்புச் சொற்கள்
திருமணம்

தொடர்புடைய செய்திகள்