விஜய் துணை நிற்க வாய்ப்புண்டு: சீமான்

விஜய் துணை நிற்க வாய்ப்புண்டு: சீமான்

1 mins read
91a268c1-49cb-416f-94da-0077edb1ae81
சீமான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நெல்லை: இந்தியாவின் பொருளியல் சீரழிந்துள்ளதாக நாம் தமிழர் கட்சி சாடியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் என பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

“அண்ணன் சீமான் மட்டும்தான் தமிழகத்தில் மக்கள் உரிமைகளுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைத்திருப்பார்,” என்றார் சீமான்.

காவிரி, கச்சத்தீவு, மீத்தேன் விவகாரம் உள்ளிட்ட எதைப் பற்றியும் பாஜகவுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக மண் கொள்ளை அடிக்கப்படும்போது அதைத் தடுக்காமல் பாஜக வேடிக்கை பார்க்கிறது எனச் சாடினார்.

“நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். எனவே அதற்கான திமுகவின் போராட்டம் ஏமாற்று வேலை,” என்றார் சீமான்.

குறிப்புச் சொற்கள்
அரசியல்