கலைஞர் நூற்றாண்டு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

1 mins read
cff0440f-39c9-4d0d-9ee7-d35c61fb1207
கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. - தமிழக ஊடகம்

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ‘கலைஞர் 100 விழா’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ‘கலைஞர் 100 விழா’ நாளை சனிக்கிழமை ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், பொதுச் செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் அழைப்பிதழை வழங்கினர்.

திரைத்துறை சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்