‘பாஜக மாநிலத் தலைவரைப் போல் செயல்படுகிறார் தமிழகத்தின் ஆளுநர்’

‘பாஜக மாநிலத் தலைவரைப் போல் செயல்படுகிறார் தமிழகத்தின் ஆளுநர்’

1 mins read
ede4ee43-c144-4ff6-bae7-e4842d499c0a
அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஆளுநர் ஆர்.என் ரவி. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: ஆளுநரைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் போடும் முட்டுக்கட்டைகளை எல்லாம் முறியடித்து தமிழ் நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் தமிழ் நாட்டின் ஆளுநராகச் செயல்படவேயில்லை. மாறாக ஆர்.எஸ்.எஸ்.- ன் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும், பா.ஜ.க.மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார்.

மனிதனைப் பிரித்தாள்வது, சாதி, மத பிரிவினையைத் தூண்டுவது போன்றவற்றைத் தான் ஆளுநர் தன்னுடைய பணியாக மேற்கொண்டு வருகிறார். ஆளுநருக்கு உண்டான பணிகளிலிருந்து அவர் தவறிவிட்டு தமிழ் நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்