யூடியூபர் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

1 mins read
2c467e34-1afe-4e45-a673-eccd3ee818fe
வாசன். - படம்: ஊடகம்

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் வாசனின் ஓட்டுநர் உரிமத்தைப் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற போது, வாசன் விபத்தில் சிக்கினார்.

இதையடுத்து மற்ற வாகனமோட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக வாசன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.