டெங்கி ஒழிப்பு நடவடிக்கை; ஒரே நாளில் ரூ.60,000 அபராதம் விதிப்பு

டெங்கி ஒழிப்பு நடவடிக்கை; ஒரே நாளில் ரூ.60,000 அபராதம் விதிப்பு

1 mins read
2e765066-84a7-4123-a631-77584c8536bf
டெங்கி பரப்பும் கொசுக்கள் காணப்பட்டால் வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: இந்தியா

திருவேற்காடு: திருவேற்காட்டில் தீவிர டெங்கி ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கிக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருவேற்காடு நகர் மன்ற தலைவர் மூர்த்தி ஆலோசனையின்படி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மேற்பார்வையில் துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஊழியர்கள் டெங்கி கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியில் இருந்து 105 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

“டெங்கி கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நூம்பல் பகுதியில் தனியார் தொழிற்சாலை மற்றும் தனியார் பள்ளியில் கொசு உற்பத்தி காணப்பட்டதால் ஒரே நாளில் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்