மலேசியா, சென்னை இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்

1 mins read
741bd303-93ec-4bd9-889c-01661e95be3d
பாதிக் ஏர்லைன்ஸ் விமானம். - படம்: ஊடகம்

சென்னை: மலேசியா, சென்னை இடையே கூடுதலாக அன்றாட விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் விமான சேவையை பாதிக் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நாள்தோறும் மாலையில் புறப்படும் பாதிக் நிறுவனத்தின் போயிங் ரக விமானம், உள்ளூர் நேரப்படி இரவு 10.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும்.

அதன் பின்னர் இரவு 11.15 மணிக்கு அதே விமானம் சென்னையில் இருந்து மலேசியாவுக்குப் புறப்பட்டுச் செல்லும். போயிங் விமானம் என்பதால் ஒரே சமயத்தில் அதில் 189 பயணிகள் வரை பயணம் செய்ய இயலும்.

சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நாடு என்பதால் மலேசியாவுக்கு தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

தற்போது சென்னை, கோலாலம்பூர் இடையே நாள்தோறும் ஐந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏர் ஏசியா, இண்டிகோ, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன. தற்போது பாதிக் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

விமானச் சேவை அதிகரித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்