தாயாரின் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், அழகிரி சந்திப்பு

1 mins read
b2091349-0f92-477f-9ecc-241840df5d72
மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி - படம்: ஊடகம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது மூத்த சகோதரர் மு.க.அழகிரியும் நீண்ட நாள்களுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்டனர்.

இருவரின் தாயாரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாளின் 90ஆவது பிறந்தநாளை அவரது குடும்பத்தார் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் நேரில் சந்தித்தனர் என்றும் சுமார் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர் என்றும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

இதுநாள் வரை இருவரும் பாராமுகமாக இருந்த நிலையில், தாயாரின் பிறந்த நாள் இருவரையும் சேர்த்து வைத்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்