வடலூர் வள்ளலார் விழாவில் ஆளுநர்: அடிகளாருக்குப் புகழாரம் சூட்டினார்

வடலூர் வள்ளலார் விழாவில் ஆளுநர்: அடிகளாருக்குப் புகழாரம் சூட்டினார்

1 mins read
e3a0b50e-7d78-4b9c-b01f-c7ee569f73b0
வடலூரில் வள்ளலார் விழாவில் தமிழக ஆளுநர் ரவி. - தமிழக ஊடகம்
Google News Preferred Icon

வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார்.

உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் விழாவில் கலந்து கொள்வதில் தான் பெரு மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

“நான் ரிஷிகள், மகான்களின் பல நூல்களைப் படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிகவும் பிரமிப்பை எற்படுத்தியது.

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் 200 ஆண்டுகளுக்கு முன் இருளை நீக்க வந்த ஜோதி ஆவார்.

“ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு நமது நாடு. இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் கொள்கை மேலும் பளிச்சிடும்,” என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

முன்னதாக புவனகிரி அடுத்துள்ள மருதூரில் வள்ளலார் அவதரித்த இல்லத்தில் ஆளுநர் தனது மனைவி லட்சுமி ரவியுடன் தரிசனம் செய்தார்.

குறிப்புச் சொற்கள்