'ஆபரேஷன் அரிக்கொம்பன்'

'ஆபரேஷன் அரிக்கொம்பன்'

1 mins read
Google News Preferred Icon

கம்பம்: கம்­பம் பகு­தியை மிரட்­டும் காட்­டு­யா­னையைப் பிடிக்க 'ஆப­ரே­ஷன் அரி­க்­கொம்­பன்' என்ற திட்­ட­த்தைத் தொடங்­கி­யுள்­ள­னர்.

தேனி மாவட்­டத்­தில் பாயும் சண்­முகா நதி அணை­யில் முகா­மிட்­டுள்ள அரி­க்­கொம்­பனைப் பிடிக்க மூன்று கும்­கி­கள் ஏற்­கெ­னவே வர­வழைக்­கப்­பட்ட நிலை­யில், முது­ம­லையைச் சேர்ந்த நான்கு பழங்­கு­டி­யி­னர் 191 வனத்துறை அலுவலர்களும் களத்தில் இறங்கி இருப்பதாக வனத்துறை கூறியுள்ளது.

அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டுப் பிடிக்க ஐவர் கொண்ட மயக்க ஊசி நிபுணர்களும் தயார்நிலையில் உள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் நக ருக்குள் கடந்த 27ஆம் தேதி புகுந்த அரிக்கொம்பன் யானை, மோட்டார் பைக் வாகனத்தில் வந்த பால்ராஜ், 65, என்பவரை தாக்கியது. கம்பம் அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந் தார். அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.