சென்னையில் அதிகரிக்கும் 20 மாடிக் குடியிருப்புகள்

சென்னையில் அதிகரிக்கும் 20 மாடிக் குடியிருப்புகள்

2 mins read
d84ebe7c-a25a-4834-bd9f-968e7a5089b7
-
Google News Preferred Icon

சென்னை: தலை­ந­கர் சென்னை யில் காலி மனை­கள் கிடைப்­பது குதி­ரைக் கொம்­பாக இருந்து வரும் சூழலில், உயரமான அடுக்கு­மா­டிக் குடியிருப்புகளைக் கட்டி விற்­பனை செய்­வ­தில் கட்டு­மான நிறு­வ­னங்­கள் அதிக ஆர்­வம் காட்டி வரு­கின்­றன.

அதி­லும் குறிப்­பாக, கிண்டி, கொட்­டி­வாக்­கம் பகு­தி­களில் 20 மாடி­கள் கொண்ட அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளைக் கட்டி விற் பனை செய்யும் திட்­டங்­களைச் செயல்­ப­டுத்துவதில் அந்­நி­று­வனங்­கள் மும்­முரமாகி உள்­ளன.

இதுகுறித்து நக­ர சீர­மைப்பு வல்­லு­நர்கள் கூறுகையில், "விமான நிலை­ய ஆணை­யத்­தின் தடை­யின்மைச் சான்றிதழ் கிடைத்துவிட்டால் அடுக்கு­மாடி கட்­ட­டங்­களை எழுப்புவதில் எவ்­வித சிக்­க­லும் இருக்­காது.

"சென்­னை­யில் காலி நிலங் கள் கிடைப்­ப­தில் தட்­டுப்­பாடு நிலவும் சூழலில், இதுபோன்ற உயரமான அடுக்­கு­மாடிக் கட்­ட­டங்­களைக் கட்டுவதற்கு அனு­ம­தித்­தால்தான் மக்­க­ளின் குடி­யி­ருப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய முடி­யும்," என்றனர்.

சென்­னை­யில் 1959ல் 14 தளங் ­க­ளு­டன் கட்­டப்­பட்ட எல்ஐசி அலு­வ­ல­கம் மட்­டுமே உய­ர­மான கட்­ட­ட­மாக இருந்து வந்­தது.

இதையடுத்து, கடந்த 2008ல் கட்­டு­மானத் திட்­டங்­க­ளுக்­கான உயரக் கட்­டுப்­பாடுகள் தளர்த்­தப்­பட்­ட பின்னர், சென்­னை­யி­லும் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் உய­ர­மான கட்­ட­டங்­களைக் கட்டு வதற்கு கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.

எனினும், விமானப் போக்­கு­வரத்துத் துறையின் கட்­டுப்­பாடு உள்­ளிட்ட சில கார­ணங்­க­ளால் கிண்டி உள்­ளிட்ட பகு­தி­களில் உய­ர­மான கட்­ட­டங்­கள் கட்­டப்­படா­மல் இருந்து வந்­தது.

இந்­நி­லை­யில், விதிமுறைகள் தளர்வால் குறிப்­பிட்ட சில நிறு­வனங்­கள் இங்கு 20 மாடி கொண்ட அடுக்குமாடிக் கட்­ட­டங்­களைக் கட்ட முன்­வந்­துள்ள தாகத் தெரிவித்துள்ளன.

சென்னை கொட்டி­வாக்­கத்­தில் 636 வீடு­களுடன் அடுக்கு­மாடிக் குடி­யி­ருப்புகள் கட்­டப்­ப­டு­கின்றன. இவற்றில் இரண்டு கட்­ட­டங்­கள் 20 தளங்­களுடனும் ஒரு கட்­ட­டம் 39 மாடி­களுடனும் 'எலி­வேட்-21' என்ற பெய­ரில் 21 மாடி­கள் உடைய அடுக்­கு­மாடிக் குடியிருப்பும் ­கட்டப்பட உள்ளதாக கட்­டு­மா­னத் துறை­யி­னர் கூறி யுள்ளனர்.

அத்துடன், கிண்டி ராஜ்­ப­வன் அரு­கில் வேளச்­சேரி செல்­லும் சாலை­யில் 20 மாடிக் குடி­யி­ருப்பு கட்டத் திட்­ட­மிட்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் 45 மாடி களுடன் குடியிருப்புக் கட்டடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது.