வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு

வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு

1 mins read
217c94cd-1bdb-4b77-a4f6-93cb1ff2e52a
-
Google News Preferred Icon

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ள தூய மதலேனா மரியாள் தேவாலயத்தில் வல்லமைத் திருவிழா நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களைச் சேர்ந்தோர் தேசியக் கொடியை ஏந்தி அதில் கலந்துகொண்டனர். பின்னர் நடைபெற்ற வில்லுப் பாட்டு நிகழ்ச்சி, நீர், நிலம், காற்று உள்ளிட்ட பஞ்ச பூதங்களைத் தற்போதைய தொழில்நுட்பம் சீரழிப்பது குறித்தும் இளையர்கள் சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.