நாட்டுப்புறப் பாடகர் ரமணியம்மாள் காலமானார்

நாட்டுப்புறப் பாடகர் ரமணியம்மாள் காலமானார்

1 mins read
b9075444-b2e2-4d15-996a-32384d9444b3
-
Google News Preferred Icon

சென்னை: புகழ்­பெற்ற நாட்­டுப்­பு­றப் பாட­க­ரும், திரைப்­ப­டப் பின்­ன­ணிப் பாட­க­ரு­மான 'ராக் ஸ்டார்' ரம­ணி­யம்­மாள் (63 வயது) உடல்­ந­லக்­கு­றை­வால் சென்­னை­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் செவ்­வாய்க்­கி­ழமை (ஏப்.4) கால­மா­னார்.

தனி­யார் தொலைக்­காட்சி ஒன்­றில் நடத்­தப்­பட்ட சரி­க­மப நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு புகழ்­பெற்ற ரம­ணி­யம்­மாள், அந்த நிகழ்ச்­சி­யின் இறு­திப்­போட்­டி­யில் இரண்­டா­வது பரிசை வென்று பல­ரது பாராட்­டை­யும் பெற்­றார். இந்­நி­கழ்ச்­சி­யின் மூலம் அவர் 'ராக் ஸ்டார்' ரம­ணி­யம்­மாள் என்று அழைக்­கப்­பட்­டார்.

2004ஆம் ஆண்­டில் வெளி­யான 'காதல்' திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்ற 'தண்­டட்டி கருப்­பாயி' பாடல் மூலம் தமிழ் திரை­யு­ல­கில் ரம­ணி­யம்­மாள் அறி­மு­க­மா­னார்.

இத­னைத் தொடர்ந்து, காத்­த­வ­ரா­யன், தெனா­வட்டு, ஹரி­தாஸ், ஜூங்கா, சண்­டக்­கோழி 2, காப்­பான், பொம்மை நாயகி உள்­ளிட்ட பல்­வேறு திரைப்­ப­டங்­களில் இடம்­பெற்ற பாடல்­க­ளை­யும் பாடி புகழ்­பெற்­றார்.

மறைந்த ரம­ணி­யம்­மாள் ஏரா­ள­மான நாட்­டுப்­பு­றப் பாடல்­க­ளை­யும் பாடி வெளி­யிட்­டி­ருக்­கி­றார். ரம­ணி­யம்­மா­ளின் மறை­வுக்கு திரையுலகப் பிர­ப­லங்­களும் ரசி­கர்­களும் இசைக் கலை­ஞர்­களும் இரங்­கல் தெரி­வித்து வரு­கின்­ற­னர். மறைந்த ரம­ணி­யம்­மா­ளின் உடல் அஞ்­ச­லிக்­காக மேற்கு மாம்­ப­லத்­தில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ளது.