தூத்துக்குடி: அடுத்த பத்து ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டம் பெரும் வளர்ச்சி காணும் என அம்மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுகம் சார்ந்த போக்குவரத்து வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், அம்மாவட்டத்தில் புதிய விமான நிலையம், சிப்காட் தொழில் வளாகம் ஆகியவற்றை அமைக்க நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"தூத்துக்குடி வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், இங்கு முதலீடு செய்ய பலர் ஆர்வமாக உள்ளனர்.
"தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பிறகு இங்கிருந்து சென்னை, டெல்லி, மும்பைக்கு சரக்குகள் அனுப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
"சிப்காட் அமைப்பதற்காக அல்லிகுளத்தில் 2,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது," என்றார் ஆட்சியர் செந்தில்ராஜ்.

