காளான் பறிக்கப்போன பெண்கள் கதி: நகைகளுக்காக கொலை

1 mins read
a74e265f-49f4-457e-9d35-45ef3e5c92b7
-

அரி­ய­லூர்: அரி­ய­லூர் மாவட்­டத்­தில் உள்ள பெரி­ய­வ­ளை­யம் என்ற கிரா மத்­தைச் சேர்ந்த மலர்­விழி, 29, கண்­ணகி, 40, என்ற இரு மாதர் களும் வய­லில் காளான் பறிக்கப் போய் காணா­மல் போய்­விட்­ட­னர்.

இத­னை­ய­டுத்து, திரு­மதி மலர்­வி­ழி­யின் கண­வ­ரான கலை­மணி என்­ப­வர் காவல்­து­றை­யி­டம் புகார் தெரி­வித்­தார். காவ­லர்­களும் ஊர்­மக்­களும் சேர்ந்து எங்­கும் தேடி­ய­தில் கடை­சி­யில் காட்­டுப் பகு­தி­யில் உள்ள வயல்­வெ­ளி­யில் அந்த இரு மாதர்­களும் வெட்டி கொலை செய்­யப்­பட்டு பிண­மா­கக் கிடந்­தது பின்­னர் தெரி­ய­வந்­தது.

அவர்­கள் அணிந்­தி­ருந்த ஆறு பவுன் நகை­களைக் காண­வில்லை. நகைக்காக அவ்விரு­வ­ரை­யும் யாரோ கொலை செய்து இருக்­க­லாம் என்ற கோணத்­தில் காவல்­து­றை­ புலன்­வி­சா­ர­ணை­யைத் தொடங்கியது.

சம்­ப­வம் நிகழ்ந்த இடத்­திற்கு மோப்ப நாய்­கள் கொண்டு வரப்­பட்டு அதி­கா­ரி­கள் தட­யங்­க­ளைத் தேடி­னர். ஆனால், அந்த நாய்­கள் அருகே இருக்­கும் ஒரு சாலை­யில் போய்ப் படுத்­து­விட்­டன. தட­ய­வியல் வல்­லு­நர்­க­ளு­டன் புலன்­வி­சா­ரணை மும்­மு­ர­மாக நடப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பொது­வாக கண்­ணகி மட்­டுமே காளான் பறிக்க வய­லுக்­குச் செல்­வார் என்­றும் சம்­ப­வம் நிகழ்ந்த அன்று அவ­ரு­டன் மலர்­வி­ழி­யும் சென்­றி­ருப்­பது ஏன் என்­பது பற்­றி­யும் விசாரணை நடக்கிறது.

கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகிக்கு 24 வய­தில் மகன் இருக்­கி­றார். மலர்­விழி தம்­ப­திக்கு 5 மற்றும் 11 வய­தில் ஒரு மக­னும் மகளும் உள்­ள­னர்.