ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு

2 mins read
ace114dd-f594-497f-97f6-b052b23371ce
'வெற்றி தேவதை' என் கையில் என்று லாட்டரிச் சீட்டை காட்டுகிறார் அனூப். அவருக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது.படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: கேர­ளா­வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்­டு­ந­ரான 44 வயது அனூப்­புக்கு லாட்­டரி மூலம் முதல் பரி­சாக ரூ.25 கோடி கிடைத்­துள்­ளது. மலே­சியா சென்று சமை­யல் கலை­ஞ­ராக நினைத்­த­வ­ருக்கு இந்தப் பரிசு கிடைத்து அவரை இன்ப அதிர்ச்சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.

ஓணம் பண்­டி­கை­யை­யொட்டி கேரள அரசு இந்த லாட்­ட­ரி பரிசுச் சீட்டை தனது லாட்­டரி இயக்­கு­ந­ர­கம் மூலம் அறி­வித்­தி­ருந்­தது.

ஒரு பரிசு சீட்­டின் விலை 500 ரூபா­ய். பத்து வரி­சை­கள் கொண்ட 67.50 லட்­சம் சீட்­டு­கள் அச்­ச­டிக்­கப்­பட்­டதில் சுமார் 66.40 லட்­சம் சீட்­டு­கள் விற்­றுத் தீர்ந்­தன. இதன் மூலம் கேரள அர­சுக்கு 330 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தப் பரிசு சீட்­டுக்­கான குலுக்­கல் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது. அதன் முடி­வில் முதல் பரி­சான ரூ.25 கோடிக்­கு­ரிய பரிசுச் சீட்டை திரு­வனந்­த­பு­ரத்­தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்­டு­ந­ரான அனூப் வாங்கி ­ இருப்பது தெரி­ய­வந்­தது.

தமக்­குப் பரிசு கிடைத்­ததை நம்பமுடி­ய­வில்லை என்­றும் போதிய வரு­மா­னம் இல்­லா­த­தால் மலே­சி­யா­வில் வேலை பார்க்­கச் செல்ல இருந்­த­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

அனூ­ப்புக்கு மாயா என்ற மனை­வி­யும் ஒரு மக­னும் உள்­ள­னர். இந்த அதிர்ஷ்டக் குலுக்­க­லில் இரண்­டா­வது பரி­சாக ரூ.5 கோடி­யும் மூன்­றா­வது பரி­சாக 10 பேருக்கு தலா ரூ.1 கோடி­யும் வழங்­கப்­ப­டு­கிறது.

முதல் பரி­சுக்­கு­ரிய சீட்டை கடந்த சனிக்­கி­ழமை இரவு ஏழு மணிக்­கு­த்தான் வாங்கி உள்­ளார் அனூப். முன்­ன­தாக ஐநூறு ரூபாய் இல்­லா­த­தால் வீட்­டில் இருந்த உண்­டி­யலை உடைத்து அதி­லிருந்த பணத்தை எடுத்­துச் சென்­ற­தா­கக் கூறு­கி­றார்.

"அடுத்த நாளே எனக்­குப் பரிசு கிடைத்­து­விட்­டது. இனி பணம் சம்­பா­திக்க வெளி­நாடு செல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை," என்­கி­றார் அனூப்.