26 மணிநேரத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட நோயாளி

26 மணிநேரத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட நோயாளி

1 mins read
78698ff0-b1e6-4687-a7c5-3379d026c133
'ஏர் ஆம்புலன்சில்' இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட பெண். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -
Google News Preferred Icon

பெங்களூரைச் சேர்ந்த 67 வயதுப் பெண் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் தனது பிள்ளைகளுடன் வசித்துவந்தார்.

இவருக்கு இதய நோய் கண்டறியப்பட்ட நிலையில் அங்கிருந்து 'ஏர் ஆம்புலன்ஸ்' எனப்படும் மருத்துவ விமானத்தின் மூலம் 26 மணிநேரப் பயணத்தில் செவ்வாய்க்கிழமையன்று (19 ஜூலை) சென்னை கொண்டுவரப்பட்டார்.

இடையில் மூன்று நிறுத்தங்கள்; ஐஸ்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளின் வழியாக இரு வேறு விமானங்களில், தீவிர சிகிச்சை மருத்துவக் குழுவினருடன் கொண்டுவரப்பட்ட இந்த மாது, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த விமானப் பயணத்துக்கு 133,000 டாலருக்கும் மேல் செலவானதாகக் கூறப்பட்டது.

இந்தியக் குடியுரிமை பெற்றிருக்கும் மாதுக்கு அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுச் சிக்கல் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

'ஏர் ஆம்புலன்சில்' இந்தியா கொண்டுவரும் செலவைக் காட்டிலும் அமெரிக்காவில் இவரது சிகிச்சைக்குக் கட்டணம் அதிகம் என்பதை 'ஏர் ஆம்புலன்ஸ்' சேவையை வழங்கிய நிறுவனம் சுட்டியது.